எப்படி தான் இப்படி செய்ய மனசு வருதோ? புதருக்குள் கேட்ட பச்சிளம் குழந்தையின் சத்தம்… எட்டி பார்த்த காய்கறி வியாபாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

By Soundarya on புரட்டாதி 4, 2025

Spread the love

உத்தரபிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள குக்லி காவல் நிலைய எல்லைக்குள், பைகுந்தி ஆற்றின் கரையில் உள்ள காளி கோயிலுக்கு அருகிலுள்ள புதரில் புதிதாகப் பிறந்த குழந்தை கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. காய்கறி விற்பனையாளர் ஹரிஷ்சந்திரா என்பவரால் முதலில் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது.   குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதும், ஹரிஷ்சந்திரா உடனடியாக புதரில் கிடந்த குழந்தையை எடுத்து தனது சொந்த வீட்டிற்கு கொண்டு சென்றார்.  

 பின்னர் இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் புதிதாகப் பிறந்த குழந்தையை அவசர மருத்துவ சிகிச்சைக்காக அனுமதித்துள்ளர்கள். முதன்மை பரிசோதனை மற்றும் சிகிச்சைக்குப் பிறகு, குழந்தையின் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தையின் உடல்நிலை முழுமையாக உறுதி செய்யப்பட்டவுடன், அவர்கள் சைல்டுலைன் சேவைகளின் பராமரிப்பில் ஒப்படைக்கப்படுவார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.