நடிகர் விஜய் தளபதி 69 படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டேன் அதன் பிறகு முழு நேர அரசியல் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் பலருக்கும் இந்த செய்தி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் விஜய் நடத்திய தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டுக்கு 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரன்டதால் அவருடைய அரசியல் என்ட்ரி அட்டகாசமாக ஆரம்பமாகி உள்ளது. இப்படி விஜய் சினிமாவை விட்டு விலகிய நிலையில் அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். மகனை ஹீரோவாக்க வேண்டும் என்ற ஆசை விஜய்க்கு இருந்தது. இதற்காக பல முன்னணி இயக்குனரிடம் கதை கேட்டு வந்தார்.
ஆனால் சஞ்சய் தனக்கு நடிப்பில் விருப்பமில்லை என்று சொன்னதால் அவருடைய விருப்பப்படி என்ன செய்ய விரும்புகிறாரோ அதே செய்யட்டும் என்று விஜய் விட்டுவிட்டார். அப்பா வழியில் நடிகர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் சஞ்சய் தனது தாத்தா வழியில் இயக்குநராக களமிறங்கிவிட்டார். லைகா தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வந்த அவருடைய படம் தற்போது பாதியில் நிற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை ஜேசனே First Copy Basis-ல் தயாரிப்பதாக கூறப்படும் நிலையில், ரூ.8 கோடி பணம் இல்லாத காரணத்தால், தற்போது படத்தின் சூட்டிங் நின்று விட்டதாம்.
