“என்ன கல்யாணம் பண்ணலன உன்ன கொன்னுடுவேன்…!!!” இளம் பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த இளைஞர்… திடுக்கிடும் பின்னணி….!!!

By Srimathi on புரட்டாதி 4, 2025

Spread the love

உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஓர் இளம்பெண் வீட்டிற்கு  பிரஜ்மோகன் மற்றும் கௌஷல் ஆகியோர் காப்பீடு திட்டம் தொடர்பாக அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றனர். மேலும் நவம்பர் 1, 2024 அன்று, இருவரும் சேர்ந்து இளம்பெண்ணை வலுக்கட்டாயப்படுத்தி அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் பிரஜ்மோகனுக்கும் இளம்பெண்ணுக்கும் திருமணம் நடந்து முடிந்தது. இதனை ஏற்க மறுத்த இளம் பெண்ணுக்கு, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் பிரஜ்மோகனின் சகோதரானா ஓம்கார் மற்றும் பிரதாப் என இருவரும் சேர்ந்து இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக சண்டிகருக்கு ரயிலில் அனுப்பிவைத்தனர்.

அங்கு பிரஜ்மோகனின் சகோதரரான ரவிக்குமார் வீட்டில் இருவரும் 15 நாள் தங்கி விட்டு, ஓட்டலுக்கு சென்றுள்ளனர். ஹோட்டலுக்கு சென்ற பிறகு இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இளம் பெண் எதிர்ப்பு தெரிவித்த பொழுது, அவரை அடித்து அவரின் தங்க நகைகளை பறித்துள்ளார் பிரஜ்மோகன். ஜூன் 7, 2025 அன்று இளம் பெண்ணை ரயிலில் ஏற்றி திருப்பி அனுப்பிவைத்துள்ளனர். வீட்டிற்கு வந்த இளம்பெண் தன் பெற்றோரிடம் தனக்கு நடந்த கொடுமைகளை கூறி கதறி அழுதார். இது தொடர்பாக காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்த பொழுது, காவல்துறையினர் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை. எனவே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, இந்தக் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 5 நபர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

   

இதுகுறித்து  பிரஜ்மோகன் தனது எக்ஸ் தளத்தில், “அக்டோபர் 1, 2022 சட்டப்படி திருமணமும்,  மே 5, 2025 அன்று கோவிலில், தனது சொந்த விருப்பத்தின் பெயரில் தன்னை இளம்பெண் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் இளம்பெண் குடும்பத்தினர் தனக்கு எதிராக பொய்யாக வழக்கு தாக்கல் செய்ய முயற்சிக்கிறார்கள்” என்று தனது கருத்தை தெரிவித்து இருந்தார்.