புத்தாண்டு வாழ்த்து மோசடி… உஷாரா இருங்க மக்களே… தவறியும் இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம்….!

By Nanthini on மார்கழி 30, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. இதை தொடர்பாக அரசு என்னதான் எச்சரிக்கை விடுத்து வந்தாலும் சில மோசடிக்காரர்கள் தினம்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்களில் பெரும்பாலான ஆன்லைன் மோசடிகள் நடைபெறுகிறது.

தற்போது நூதன மோசடிகள் வரிசையில் புதிய வரவு தான் புத்தாண்டு வாழ்த்து மோசடி. தெரியாத நபர்களிடமிருந்து whatsapp, telegram, இமெயில் ஆகியவற்றில் புத்தாண்டு வாழ்த்து, பரிசு, Bank coupon என்ற பெயரில் வரும் எந்த லிங்கையும் திறக்கவோ கிளிக் செய்யவோ வேண்டாம். தவறி கிளிக் செய்தால் ஆபத்தான APK file போனில் டவுன்லோட் ஆகி தனிப்பட்ட விவரங்களை திருடிவிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.