தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டு ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. இதனிடையே நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, தேர்தல் கூட்டணி மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து மதிமுகவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஜாதி மத மோதல்கள் உருவாவதை தடுக்கவே கடந்த ஒன்பது ஆண்டுகளாக திமுக கூட்டணியில் நீடிக்கின்றோம். இப்போதும் இந்த கூட்டணியில் நீடிப்பதில் உறுதியாக உள்ளோம். மாற்று அணிக்கு இடமில்லை. எத்தனை தொகுதிகள் என்பது குறித்து தேர்தல் நேரத்தில் தலைமை முடிவெடுக்கும். திமுக உரிய இடங்களை வழங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. தொகுதிகள் குறைந்தால் எங்களுக்கு வருத்தம். ஆனால் கொள்கையே முதன்மையானது என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.
