இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். சமூக வலைதளங்களிலும் நேரத்தை செயல்பட்டு வருகிறார்கள். பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் என அனைத்தையும் பயன்படுத்தி வருகிறார்கள். இதில் whatsapp தினம் தோறும் பயன்படுத்தும் ஒரு செயலியாக மாறிவிட்டது. இதற்கிடையில் வாட்ஸ் அப்பில் அவ்வப்போது புதுப்புது அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் வெளியிட்டு வரும் நிலையில் தற்போது புது அப்டேட் ஒன்று செய்யப்பட்டுள்ளது.
அதாவது டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்துவிட்டதால் தானாக ஒரு வாட்ஸ் அப் குரூப்பில் இணைக்கப்பட்டு அதன் மூலமாக போன் செய்யப்படுகிறது இந்த குரூப் மோசடிகளில் இருந்து பாதுகாப்பதற்கு whatsapp புது அப்டேட் கொடுத்துள்ளது. அதாவது தெரியாத நபர் தெரியாத குரூப்பில் இணைக்கப்பட்டால் ஒரு safety மெசேஜ் வரும். அதில் குரூப்பின் அனைத்து தகவலுமே இருக்கும். பயனர்கள் இதனை சரிபார்த்துக் கொண்டு குரூப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
