அயர்லாந்தியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆறு வயது சிறுமி மீது சிறுவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தின் வாட்டர் போர்டில் நேற்று முன்தினம் மாலை இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆறு வயது சிறுமி தன்னுடைய வீட்டிற்கு வெளியே அவளுடைய நண்பர்களுடன் விளையாடி கொண்டு இருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த 12 – 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் ஆறு வயது சிறுமியை பார்த்து இந்தியாவுக்கு திரும்பி செல்லுங்கள் என்று கூறி சைக்கிள் தாக்கி அத்துமீறி இனவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சைக்கிளை ஏற்றி சிறுமியின் பிறப்புறுப்பிலும் தாக்கி கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் சிறுமியின் முகத்தில் குத்தி தாக்கியுள்ளனர். அந்த சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது பயத்தில் படுக்கையில் அழுது கொண்டே இருப்பதாகவும் வெளியே சென்று விளையாடுவதற்கு கூட பயப்படுவதாகவும் அவருடைய தாயார் கண்ணீருடன் கூறுகின்றார். கடந்த இரண்டு வாரங்களில் இந்திய வம்சாவளியினர் மீது இதுவரை மூன்று தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
