இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ள ஜியோவை பின்னுக்கு தள்ளும் வகையில் பிஎஸ்என்எல் தற்போது புதிய ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. தொலைத் தொடர்பு துறையில் புதிய புரட்சிக்கு வழிவகுக்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் சுதந்திர தின சிறப்பு சலுகை ஆக வெறும் ஒரு ரூபாய்க்கு ஒரு மாத இணையம் மற்றும் பேச்சு சேவையை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முழுவதும் 30 நாட்களுக்கு இந்த சேவையை பயனர்கள் பெற முடியும். இந்த திட்டத்தின் மூலமாக பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளை பரந்த அளவில் பரப்பும் நோக்கத்தில் மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் அதிகப்பட்ச சேவையை வழங்க முயற்சி செய்கின்றது.
இதன் மூலமாக நாடு முழுவதும் உள்ள கிராம பகுதிகள் மற்றும் வருவாய் குறைவான மக்களுக்கு இணைய மற்றும் தொலைபேசி சேவையை எளிதில் அடைய செய்ய முடியும். இந்த திட்டத்தில் இணையும் பயனாளிகளுக்கு ஒவ்வொரு நாளும் 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் குரல் அழைப்பு மற்றும் 100 sms என பல வசதிகள் கிடைக்கும். அதேசமயம் ஒரு இலவச சிம் கார்டும் வழங்கப்படும். இதனை பெறுவதற்கு பிஎஸ்என்எல் கிளைகளில் நேரில் அல்லது ஆன்லைன் மூலமாக பதிவு செய்யலாம். இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் ஒரு ரூபாய் என்ற குறைந்த தொகைக்கு இந்த சேவையை வழங்கப்படுவதால் மிகப்பெரிய பயணர் வரவேற்பை இதற்காக எதிர்பார்க்கலாம். இது போன்ற திட்டங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டால் பிஎஸ்என்எல் நிறுவனம் மீண்டும் அதன் பழைய புகழை மீட்டு எடுக்க முடியும் என கூறப்படுகிறது.
