தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இப்படியான சூழலில் மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றி பேரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்துடன் மாநாடு நடைபெறுகிறது. மதுரையின் புறநகர் பகுதியான பாரபத்தியில் சுமார் 506 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
விஜய் மதுரையே அலறும் அளவிற்கு உரையாற்றி வருகின்றார். எதிரியான திமுக மற்றும் பாசிசம் செய்யும் பாஜக என அனைத்து கட்சிகளையும் அலரடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் 234 தொகுதிகளிலும் விஜய் தான் போட்டி என அறிவித்துள்ளார். இப்படியான நிலையில் மாநாட்டில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இரண்டாவது கொள்கை பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. உங்க விஜய் வரேன், பெரியாரின் பேரன் வரான், எளியவர்களின் குரல் போன்ற வரிகள் இந்த பாடலில் இடம் பெற்றுள்ளன.
new anthem for TVK peaked with anna voice. pic.twitter.com/jY598u37Ln
— Fayas.naxiim🐿️ (@_faaaz) August 21, 2025
