தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தடபுடலாக நடந்தது. இதுவரை தமிழகத்தில் எந்த ஒரு கட்சி மாநாடும் எந்த அளவுக்கு பிரம்மாண்டமாக நடைபெற்றது இல்லை. தற்போது மாநாடு தொடங்கியுள்ளது. விஜய் நிகழ்ச்சி மேடைக்கு வந்துள்ளார். தவெகவின் கொள்கை தலைவர்களான அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், பெரியார், வேலு நாச்சியார், காமராஜர் ஆகியோரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மாநாட்டு திடலில் 40 அடி கொடி கம்பத்தில் அக்கட்சியின் கொடியை ஏற்றினார் தலைவர் விஜய். தற்போது பேசி வரும் விஜய், 2026 தேர்தலில் திமுக – தவெக இடையேதான் போட்டி. தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது அப்படி இருக்கும்போது தவெக எப்படி ஒட்டும் . நேரடி அடிமை கூட்டணியுடன் ஒருபோதும் எங்களுடைய கட்சி இணையாது , MGR ஆரம்பித்த அதிமுக தற்போது பொருந்தா கூட்டணியில் சிக்கி தவிக்கிறது. நமது ஒரே கொள்கை எதிரி BJP. ஒரே அரசியல் எதிரி DMK என்று கூறியுள்ளார்.
