கரூரில் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயின் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல தரப்பினரும் விஜய்க்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் நீதிமன்றம் தனிக்குழு அமைத்து விசாரணையை தொடங்கியுள்ளது.
அதேசமயம் நேற்று விஜய் வீடியோ வெளியிட்டு கரூர் துயர சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டிருந்தார். தனக்கும் மனிதாபிமானம் உள்ளது தானும் மனுஷன் தான், அவ்வளவு உயிர்கள் போயிருக்கும் போது எப்படி என்னால் போக முடியும், ஆனால் திரும்பவும் நான் அங்கு சென்றால் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்துவிடும் என்பதால் தான் சென்னைக்கு திரும்பியதாக வருத்தத்துடன் கூறி இருந்தார்.
இந்நிலையில் கரூர் உயிரிழப்பு செய்தியை உறுதி செய்தவுடன் அங்கு செல்ல விஜய் தயாராக இருந்ததாகவும் ஆனால் அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என்றும் தமிழக வெற்றி கழகம் நிர்வாகி அருண்ராஜ் கூறியுள்ளார். அதேபோல சம்பவ இடத்திற்கு செல்ல தான் கோரிக்கை வைத்ததாக கூறிய அவர், ஆட்சியர் அதற்கு பதில் அளிக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் தமிழக வெற்றி கழகம் கட்சியின் மாவட்ட செயலாளர்களை கைது செய்து விடுவோம் என திமுக அரசு மிரட்டுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்த விவகாரம் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…