“இதை செய்தால் 1 வருட சிறை தண்டனை” வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய சிக்கல்..!

By Soundarya on மார்கழி 27, 2025

Spread the love

தமிழகத்தில் 2025-ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, தற்போது சுமார் 1.53 லட்சத்திற்கும் அதிகமானோர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்கள், 2002 அல்லது 2005 SIR (Special Investigation Roll) பட்டியலில் இடம்பெற்றுள்ள குடும்பத்தினர் அல்லது உறவினர்களின் விவரங்களைத் தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தவறான தகவல் அளிப்பவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாட்டில் இன்று மாலை வரை வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ள நிலையில், இந்தப் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது