கோவையில் ஷாக்..! பானிபூரி வாங்கி தருவதாக கூறி… 5 வயது சிறுவனை அழைத்து சென்ற 17 வயது சிறுவன்… பெற்றோருக்கு வந்த போன் காலில் காத்திருந்த அதிர்ச்சி…!!

By Soundarya on மார்கழி 27, 2025

Spread the love

கோவை அன்னூர் அருகே ஓரைக்கல்பாளையத்தில் வசிக்கும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ஹக் என்பவரின் 5 வயது மகன் ஹூமாயூன், பானிப்பூரி வாங்கித் தருவதாகக் கூறி கடத்தப்பட்டார். அதே தொழிற்சாலையில் பணியாற்றும் 17 வயது சிறுவன், சிறுவனைத் தந்திரமாக அழைத்துச் சென்று தடுத்து வைத்துக்கொண்டு, அவனது குடும்பத்தினரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

இந்த கடத்தல் குறித்துப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தனிப்படை அமைத்துப் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கேரளா மாநிலம் பாலக்காட்டில் பதுங்கியிருந்த 17 வயது சிறுவன் மற்றும் அவனது நண்பர் அன்வோர் அலியை போலீசார் கைது செய்து, சிறுவன் ஹூமாயூனைப் பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.