15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மாஸ்… விஜய் ஹசாரே தொடரில் ஆட்ட நாயகன் விருது வென்றார் விராட் கோலி…!!

By Soundarya on மார்கழி 27, 2025

Spread the love

2025-26 விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடரில், டெல்லி அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்திற்காக ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார்.  நேற்று முன்தினம் பெங்களூருவில் நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் விராட் கோலி இந்த விருதைப் பெற்றார். இந்தப் போட்டியில் கோலி 61 பந்துகளில் 77 ரன்கள் (13 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) எடுத்து டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தார்.

லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் அவர் அடிக்கும் தொடர்ச்சியான 6-வது 50+ ரன்கள் இதுவாகும். மேலும், இத்தொடரில் அவர் 1,000 ரன்கள் என்ற மைல்கல்லையும் எட்டியுள்ளார். ஆட்ட நாயகன் விருதுடன் அவருக்கு ₹10,000 பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விஜய் ஹசாரே தொடரில் விளையாட வந்த கோலி, தனது முதல் போட்டியிலேயே  சதம் அடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.