அதிமுக கூட்டணியில் ஓரிரு நாட்களில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் இன்று நடைபெற்றது. அப்போது வேட்பாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணி மிகவும் வலிமையாக இருப்பதாகவும், மேலும் சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
தேர்தலில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று குறிப்பிட்ட அவர், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்நிலையில் இபிஎஸ் குறிப்பிட்ட அந்த கட்சி எது என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனிடையே அந்த கட்சி டிடிவி தினகரன், தேமுதிக அல்லது ஓபிஎஸ் ஆகிய மூவரில் ஒருவராக இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த மூன்று கட்சியினருடன் பாஜக சார்பிலும் அதிமுக சார்பிலும் பேச்சுவார்த்தை என்பது நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…