விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், திமுகவின் ஐடி விங் (IT Wing) நிர்வாகிகளை “சில்ற ஐடி விங்” என்று கடுமையாக விமர்சித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக – காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சியில் பங்கு, தொகுதிப் பங்கீடு போன்ற விவகாரங்களில் உரசல் ஏற்பட்டுள்ள நிலையில், மாணிக்கம் தாகூரின் இந்தப் பதிவு கூட்டணியின் விரிசலை வெளிப்படையாகக் காட்டுகிறது. குறிப்பாக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக வென்ற தொகுதிகளைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸின் ஆதரவு இன்றி வெற்றி சாத்தியமில்லை என்ற தொனியில் அவர் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்க்கு ஆதரவாகக் கருத்து தெரிவிப்பதும், திமுகவின் செயல்பாடுகளைத் விமர்சிப்பதும் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரம் மற்றும் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்கள் விஜய்யைச் சந்தித்தது போன்றவை திமுக தரப்பிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக இரு கட்சித் தொண்டர்களிடையே சமூக வலைதளங்களில் மோதல் வெடித்துள்ள நிலையில், மாணிக்கம் தாகூர் தனது பதிவில், “காங்கிரஸ்காரர்கள் தரம் தாழ்ந்து விமர்சிக்கக் கூடாது, ஏனெனில் நம் தலைவன் அன்பின் வழியில் நடப்பவர்” எனக் குறிப்பிட்டதுடன் திமுக ஐடி விங்கை “அரசவைக் கவிஞர்கள்” என மறைமுகமாகச் சாடியுள்ளார்.
இந்த அரசியல் மோதல் திமுக-காங்கிரஸ் கூட்டணியின் எதிர்காலம் குறித்த பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒருபுறம் திமுகவை நீண்ட காலத் தோழமை என்று கூறிக்கொண்டே, மறுபுறம் தேர்தல் வெற்றியில் காங்கிரஸின் பங்களிப்பை வலியுறுத்தி மாணிக்கம் தாகூர் அழுத்தம் கொடுத்து வருகிறார். 2026 தேர்தலில் 38 தொகுதிகள் மற்றும் அமைச்சரவையில் பங்கு என்ற காங்கிரஸின் கோரிக்கைக்கு திமுக செவிசாய்க்குமா அல்லது இந்த மோதல் கூட்டணியின் முறிவுக்கு வழிவகுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…