தற்போதைய வருமான வரி சட்டம் கடந்த 1961 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. காலத்திற்கு ஏற்ப இந்த சட்டத்தில் மாற்றத்தை கொண்டு வருவதற்காகவும் பல்வேறு சட்ட பிரிவுகள் மற்றும் வார்த்தைகளை எளிமைப்படுத்தவும் இந்த ஆண்டு புதிய வருமான வரி மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்றுவிட்டது.
இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் புதிய வருமான வரி சட்டம் அமலுக்கு வர உள்ளதாக மத்திய அரசு முன்பே அறிவித்திருந்தது. இந்த சட்டத்தின் படி 12 லட்சம் ரூபாய் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு வரி இல்லை. அதாவது மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குவோர் வருமான வரி கட்ட தேவையில்லை. வருமான வரி இல்லை என்பதால் மக்கள் பணத்தை தாராளமாக செலவு செய்யும் போது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி உயரும் என்று மத்திய அரசு கருதுகிறது
