தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக பொங்கல் பரிசு வழங்கப்பட்டதுடன் ரொக்க பணமும் வழங்கப்பட்டது. ஆனால் 2025 ஆம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக ரொக்க பணம் வழங்கப்படவில்லை. இதனிடையே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் பொங்கல் பண்டிகைக்கு ரொக்க பணம் வழங்கப்படும் என ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அரசு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகும் என மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2026 பொங்கல் பண்டிகைக்கு அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட தொகுப்புடன் ரொக்கமும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க டோக்கன் அச்சடிக்கும் பணி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விரைவில் பொங்கல் பரிசு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
