தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி முதல்வர் ஸ்டாலின் தனது கூட்டணியை பலமாக வைத்துக் கொண்டே இந்த முறையும் திமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விடலாம் என்ற எண்ணத்தில் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார். அதில் ஒரு பகுதியாக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்று கட்சியினர் பலரையும் தங்கள் கட்சியில் இணைத்து வருகிறார்கள்.
இப்படி தேர்தல் வேலை மும்முறமாக சென்று கொண்டிருக்கும் சூழலில் சென்னை மாநகராட்சியில் அதிகாரிகளை நிர்வகிக்கும் விஷயத்தில் அமைச்சர்கள் நேருவுக்கும் சேகர்பாபுவுக்கும் மோதல் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை சரியாக கையாளவில்லை என அதிகாரிகளிடம் நேரு கரார் காட்டியுள்ளார். அதற்கு சேகர்பாபுவை கலந்தாலோ சித்த பின்னரே ஏதும் செய்ய முடியும் என்று பதில் வந்ததால் அமைச்சர்களுக்கு இடையே பணிப்போர் பெரிதாகி வருவதாக பேசப்படுகிறது.
