தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் மறைவு நாட்களில் அரசு சார்பில் மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை மிலாதுன் நபி அதாவது நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் தடையை மீறி மதுபானங்களை விற்பனை செய்தால் அல்லது பதுக்கி வைத்திருந்தால் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். எனவே செப்டம்பர் 5ஆம் தேதி மது கடைகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
