கடந்த 2015ஆம் வருடம் தமிழ்நாடு அரசு நிலப் பதிவேடுகளை மின்னணுப் பதிவாக்குவதை நடைமுறைப்படுத்தியது. ஆன்லைனில் நிலப் பதிவேடுகளை தேடுவதை எளிமையாக்குவதே இதன் நோக்கம் ஆகும்.பொதுமக்கள் தங்களது பட்டா, சிட்டா ஆவணங்களை ஆன்லைனிலேயே பார்ப்பதற்கு வசதியாக இ-சேவை தளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்நிலையில் சொத்துகளை வாங்குவது, விற்பதில் இருக்கும் சிக்கல்களை குறைப்பதற்கு ஆளில்லா பதிவு (Presenceless Registration) முறையை அறிமுகப்படுத்த தமிழக அரசு தயாராகி வருகிறது. அதன்படி, சொத்துகளை விற்பவரோ அல்லது வாங்குபவரோ பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு செல்லாமலேயே ஆன்லைனில் பதிவு நடைமுறைகளை செய்ய முடியும். சார்பதிவாளர் ஆன்லைனிலேயே விண்ணப்பத்தை சரிபார்த்து ஒப்புதல் அளிப்பார். இந்த வருடம் இறுதிக்குள் இது நடைமுறைக்கு வருமாம்.
