பொதுத்தேர் மாணவர்களுக்கு காலையிலேயே குட் நியூஸ்… இனி அலையவே வேண்டாம்… அரசு அதிரடி உத்தரவு…!

By Nanthini on புரட்டாதி 4, 2025

Spread the love

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனுக்காக புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. வெகு தூரத்தில் உள்ள மையங்களுக்கு செல்வதில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே தேர்வுக்காக 10 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் மாணவர்களுக்கு அருகிலேயே மையங்கள் அமைக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பரிந்துரை அறிக்கையை அலுவலர்கள் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் தேர்வு துறையில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.