தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விலக உள்ளதாக ஒரு பரபரப்பு தகவல் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கும் சூழலில் செப்டம்பர் 5ஆம் தேதி இதற்கெல்லாம் பதில் அளிப்பதாக செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி மனம் திறந்து பேச இருப்பதாக அதிமுகவை செங்கோட்டையன் பரபரப்பாகி உள்ளார்.
அவரது நகர்வுகளை பிற கட்சிகளும் உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில் செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் முத்துசாமி, மற்ற கட்சிகளில் இருந்து வருபவர்களை திமுக வரவேற்கும் என தெரிவித்துள்ளார். மற்ற கட்சிகளில் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கம் திமுகவுக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
