செப்டம்பர் 22 முதல் அமல்… இனி இந்த பொருள்களுக்கு எல்லாம் GST கிடையாது… மக்களுக்கு குட் நியூஸ்…!

By Nanthini on புரட்டாதி 4, 2025

Spread the love

அன்றாடம் பயன்படுத்தும் பல பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 5% குறைக்கப்பட்டுள்ளது அதன்படி தலைக்கு தேய்க்கும் எண்ணெய், ஷாம்பு, டூத் பேஸ்ட், சோப்பு, சேவிங் கிரீம் விலை குறையும். சமையல் பாத்திரங்கள் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கு பயன்படும் பொருள்களின் மீதான வரியும் ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தையல் இயந்திரம் மற்றும் அதன் பாகங்கள் மீதான வரியும் 12 சதவீதத்திலிருந்து 5% குறைக்கப்பட்டுள்ளது. காக்ரா, சப்பாத்தி மற்றும் பரோட்டா ஆகிய உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாதாம், முந்திரி, பிஸ்தா உள்ளிட்ட உலர்ந்த பழங்களுக்கு ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5% குறைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர 32 அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகள், புற்றுநோய் மருந்துகள் மற்றும் அரிய நோய்களுக்கான மருந்துகளுக்கு இனி ஜிஎஸ்டி கிடையாது. தனிநபர் ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடுகள், நோட்புக்ஸ், பென்சில் உள்ளிட்ட எழுது பொருள்களுக்கும் ஜிஎஸ்டி கிடையாது. 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அனைத்தும் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகின்றன. அத்தியாவசிய பொருள்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.