ஜீ தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் நடிகை சைத்ரா ரெட்டி. இவர் அந்த சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்தும் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது சன் டிவியில் டிஆர்பி ரேட்டில் முன்னணியில் இருக்கும் கயல் நாடகத்தின் கயல் கதாபாத்திரமாக சைத்ரா ரெட்டி நடித்துள்ளார்.

இந்த நாடகத்தில் இவரின் நடிப்பு மிக அழகாகவும் மக்களை ஈர்க்கும் விதமாகவும் அமைந்திருக்கும். வெள்ளித்திரையிலும் அஜித் நடித்த வலிமை படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ சூட்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

இந்நிலையில் சித்ரா ரெட்டி பெங்களூரில் பெண்களுக்கான நிலவரசி என்ற பொட்டிக் ஒன்றை ஆரம்பிக்க உள்ளார். இந்த பிரத்தியோகத் துணிக்கடை வருகிற ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி திறக்கப்பட இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இக்கடை திறப்பு விழாவிற்கு அழகிய புடவை அணிந்து தனது ரசிகர்களுக்கும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் சைத்ரா ரெட்டியின் கடை திறப்பு விழா பதிவினை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
