Deva

இப்போலாம் பட வாய்ப்புகள் வருவதில்லை… மேடையில் ஓபனாக பேசிய தேவா…பல ஹிட் பாடல்களை கொடுத்தவருக்கே இந்த நிலைமையா!

By admin on ஆவணி 4, 2024

Spread the love

தேவா என்று அழைக்கப்படும் தேவனேசன் சொக்கலிங்கம் தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். சிறுவயதிலிருந்தே இசையால் ஈர்க்கப்பட்ட தேவா சந்திரபோஸ் உடன் இணைந்து பல இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். பின்னர் கிளாசிக்கல் ம்யூக்சிகை கற்க தொடங்கிய தேவா, லண்டனில் உள்ள டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக்கில் இசை படிப்பை முடித்தார். தேவா தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் தேவா.

ஆரம்பத்தில் தேவா அவர்கள் தூர்தர்ஷன் மற்றும் பொதிகை சேனலில் சில காலம் பணிபுரிந்தார். வயலும் வாழ்வும் நிகழ்ச்சிக்கு பாடல்களை இயற்றினார். சில நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தார். அதன் மூலம் சினிமா வாய்ப்பினை பெற்ற தேவா 1989 ஆம் ஆண்டு ‘மனசுக்கு ஏத்த மகராசா’ திரைப்படத்தில் மூலம் இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமானார்.

   

   

அடுத்ததாக ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படத்திற்கு இசையமைத்தார். இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றி அடைந்ததால் தேவா அனைவரின் கவனத்தை ஈர்த்தார். அவருக்கு ‘தேனிசைத் தென்றல் தேவா’ என்ற பெயரும் கிடைத்தது.

 

90களில் உச்சத்தில் இருந்த தேவா இசையமைத்த ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘ஆசை’, ‘காதல் கோட்டை’, ‘நேருக்கு நேர்’, ‘நினைத்தேன் வந்தாய்’, ‘வாலி’, ‘குஷி’ ஆகிய படங்கள் மெகா ஹிட் ஆனது. கானா பாடல் கலாச்சாரத்தை ஆரம்பித்த பெருமை தேவா அவர்களையே சேரும். அதிலிருந்து ‘கானா பாடல் தேவா’ என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.

கானா இசையின் மூலம் பேரும் புகழும் அடைந்த தேவா 1990 ஆம் ஆண்டு சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது ஆகியவற்றை வென்றார். இவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா ஒரு இசையமைப்பாளர் ஆவார். தேவா அவர்களின் மருமகன் தான் நடிகர் ஜெய் என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் தேவா தற்போது ‘பி2’ என்ற திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் விழாவில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் தேவா, இப்போதெல்லாம் பட வாய்ப்புகள் வருவதில்லை என்னை நம்பி பி2 படத்திற்கு இசையமைக்க தந்தருக்கு நன்றி என்று ஓப்பனாக பேசியிருந்தார் இசையமைப்பாளர் தேவா. இதை பார்த்த இணையவாசிகள் பல வெற்றி படங்களில் பணியாற்றி மெகா ஹிட் ஆன கானா பாடல்களை கொடுத்த மிகப்பெரிய இசையமைப்பாளருக்கு இந்த நிலைமையா என்று பேசி வருகின்றனர்.