முதலமைச்சர் மு க ஸ்டாலின் 66.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக ஒரு நாளைக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். மேலும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் பொதுமக்களின் புகார்களுக்கு விரைவில் தீர்வு காணுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள சென்னை குடிநீர் செயலி என்ற புதிய செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த செயலி மூலம் பொதுமக்கள் பதிவு செய்யும் புகார்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்ட புவியியல் தகவல் அமைப்பின் மூலம் தானாகவே கணினி வழியாக பெறப்பட்டு சம்பந்தப்பட்ட உதவி பொறியாளருக்கு குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ் அப் வாயிலாக அனுப்பப்படும். புகார்களை இணையதளம், மின்னஞ்சல், 8144930308 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், பேஸ்புக், எக்ஸ் தளம் போன்ற சோசியல் மீடியா தளங்களிலும் பதிவு செய்யலாம். சென்னை குடிநீர் செயலியை செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
