நீலகிரி மாவட்டம் குன்னூரில் சேர்ந்த அபு முகமது ஷாஜிதன் என்பவருடைய மகன் முகமது அனாஸ் (18). இவர் குன்னூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் மாணவி முகமதுவை காதலிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் காதல் தோல்வி அடைந்த முகமது இது பற்றி சில நாட்களாக தன்னுடைய நண்பர்களிடம் சோகத்துடன் கூறிவந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி முகமது instagram மூலமாக தன்னுடைய நண்பர் மற்றும் காதலித்த மாணவிக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
அதில் நான் உயிர் வாழ பிடிக்கவில்லை என்றும் என்னுடைய பெற்றோரையும் பூனைக்குட்டியையும் நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள், நான் தேயிலை தோட்ட கழக எஸ்டேட் பகுதியில் இருக்கும் மரண பாறையில் குதித்து தற்கொலை செய்யப் போகிறேன் என்று பதிவிட்டுள்ளார். உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்று வாலிபரை தேடினர். அப்போது அங்கு ஒரு பையும் மதுபாட்டிலும் இருந்ததால் வாலிபர் மது குடித்துவிட்டு 1500 அடி பள்ளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதப்பட்டது.
ஆனால் அன்று இரவாகி விட்டதால் அவரைத் தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டதால் மறுநாள் தொடங்கி மூன்று நாட்களாக தேடும் பணி தீவிரமாக நடந்தது. இந்த நிலையில் நான்காவது நாளான நேற்று நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு இறந்த நிலையில் வாலிபரின் சடலம் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து நீக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
