ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் பயின்று வந்த நிலையில் அந்த சிறுமிக்கும் அதே மாவட்டம் தமோதர்பூர் கிராமத்தை சேர்ந்த ஜிண்டு ஜனா என்ற வாலிபருக்கும் instagram மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கடந்த பத்தாம் தேதி அந்த வாலிபரை பார்க்க சிறுமி அவருடைய கிராமத்திற்கு சென்றுள்ளார். ஆனால் சிறுமியை அவருடைய வீட்டில் உடனடியாக விட்டு விடும் படி அந்த வாலிபரின் தாயார் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியை தன்னுடைய பைக்கில் அழைத்துக் கொண்டு வாலிபர் சென்றார்.
சிறுமியை அவரின் கிராமத்திற்கு அழைத்துச் செல்லாமல் அருகே உள்ள முந்திரி தோப்புக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இது பற்றி யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்று கூறியும் மிரட்டியுள்ளார். இதனால் தனக்கு நடந்த கொடூரத்தை தாங்க முடியாமல் மன உளைச்சல் அடைந்த சிறுமி வீட்டுக்கு வந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமியை மீட்ட குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிறுமிக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தனக்கு நடந்த கொடூரம் பற்றி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
