நெப்போலியன் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபலமான நடிகர் மற்றும் வில்லன் நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் குமரேசன் துரைசாமி என்பதாகும். தமி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் ஆங்கில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் நெப்போலியன். 1991 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நெப்போலியன்.

1993 ஆம் ஆண்டு எஜமான் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலம் பிரபலமானார். தொடர்ந்து பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து புகழ்பெற்றார் நெப்போலியன். இதற்குப் பிறகு நடிகராக ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். 2000 கால கட்டத்திற்கு பிறகு கூட குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார் நெப்போலியன். ஆரம்பத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராக சேர்ந்து பல பதவிகளை வகித்தார்.
தொடர்ந்து அக்காட்சியின் சார்பில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார் நெப்போலியன். நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள். அதில் மூத்த மகன் தனுஷுக்கு தசை நார் வளர்ச்சி நோய் இருந்தது. இதனால் மிகுந்த சிரமப்பட்டு சிகிச்சை செய்து தற்போது அமெரிக்காவில் மகனுக்காக செட்டிலாகி இருக்கிறார் நெப்போலியன்.
தனது மூத்த மகன் தனுஷ் 18 வயதை தாண்ட மாட்டார் அவர் உயிரோடு இருக்க மாட்டார் என்று கூறியவர் மத்தியில் தனது மகனுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றி தற்போது சில மாதங்களுக்கு முன்பாக அவரது மகனுக்கு திருமணமும் செய்து வைத்தார் நெப்போலியன். இவரது மகனின் திருமணம் ஜப்பானில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிலையில் நடிகர் நெப்போலியன் அவர்களின் மூத்த மகன் தனுஷ் மற்றும் மருமகள் அக்ஷயா ஆகியோர் தல பொங்கல் கொண்டாடி இருக்கிறார்கள். இதனால் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மருமகள் அக்ஷயாவுக்கு குங்குமம் வைத்து ஆசீர்வாதம் செய்தார் மாமியார் ஜெயசுதா. இதை பார்த்தால் நெப்போலியன் எமோஷனாக இருந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
