திடீரென PUMA நிறுவனம் PVMA என்று மாறியதால் பரபரப்பு… காரணம் என்னனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…

By admin on தை 15, 2025

Spread the love

PUMA என்பது ஜெர்மனியை தலைமையிடமாகக் கொண்ட தடகள மற்றும் விளையாட்டு காலணிகளை உருவாக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 1924 ஆம் ஆண்டு அடால்ஃப் மற்றும் ருடால்ப் என்னும் சகோதரர்களால் உருவாக்கப்பட்டது. இவர்களுக்கிடையே ஏற்பட்ட பிளவு காரணமாக 1948 ஆம் ஆண்டு இந்நிறுவனம் PUMA மற்றும் Adidas என்ற இரண்டு நிறுவனங்களாக உருவெடுத்தது.

   

உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் PUMA சமீபத்தில் இந்தியாவில் உள்ள PUMAவின் அதிகாரப்பூர்வ இணையதளம் கடைகள் மற்றும் விளம்பரப் பலகைகளில் பிராண்டின் பாரம்பரிய PUMA என்ற பெயருக்கு பதிலாக PVMA லோகோவை வைத்திருந்தார்கள். இதனால் நெட்டிசன்கள் மற்றும் மக்கள் பல குழப்பத்துக்கு ஆளானார்கள். PUMA தன்னுடைய பெயரை மாற்றி விட்டதா என்று பேசி வந்தனர்.

   

தனது பெயரை PVMA என்று மாற்றியதற்கு எழுத்துப்பிழை காரணமாக இருக்கலாம் என்று ஒரு சிலர் கூறினார்கள். ஒரு சிலர் இது புதுவித வியாபார யுக்தியாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். இதற்கு உண்மையான காரணம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? அது என்னவென்றால் PUMA தனது அதிகாரப்பூர்வ பிராண்ட் அம்பாசிடராக பிவி சிந்துவை அறிவித்திருக்கிறது. இதை கொண்டாடும் வகையில் தான் PUMA தனது பெயரின் முதல் இரண்டு இடத்தில் பி வி என்ற எழுத்தை சேர்த்து அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது தற்காலிகமான மாற்றம் தான் என்று கூறப்படுகிறது.

 

PUMA தற்போது பிவி சிந்துவுடன் இணைந்து பேட்மிட்டனுக்கான பிரத்தியேக தயாரிப்புகளை உருவாக்க போவதாக அறிவித்திருக்கிறது. இதில் காலணிகள் ஆடைகள் மற்றும் மற்ற அக்ஸசரீஸ் அடங்கும். இந்த பார்ட்னர்ஷிப் 2025 இந்தியா ஓபனில் இருந்து தொடங்கும். இந்தியாவில் பேட்மிட்டனை புதிய இடத்துக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு PUMA செயல்படுவதாக கூறுகிறார்கள். மேலும் இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையிலும் விளையாட்டில் இளைஞர்களின் ஆர்வத்தை வளர்ப்பதிலும் இந்த முயற்சி முக்கிய பங்கு வகிக்கும் என்ற PUMA உறுதி அளித்து இருக்கிறது.