தனக்கு எந்த சம்பந்தமும் இல்லாத விஜயை பற்றி சுசித்ரா பேசுவது சரியா…? சரமாரி கேள்வி கேட்ட நடிகை ஷர்மிளா…

By admin on தை 15, 2025

Spread the love

விஜய் தமிழ் சினிமாவில் பணியாற்றும் முன்னணி நடிகர் மற்றும் புகழ் பெற்ற நடிகர் ஆவார். இவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். அதன் மூலம் 1980களில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விஜய். அதை தொடர்ந்து தனது 18 வது வயதில் 1990களில் நாயகனாக அறிமுகமானார் விஜய்.

   

ஆரம்பத்தில் குடும்பக் கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து பிரபலமான விஜய் 2000 காலகட்டத்திற்கு பிறகு சமூக நீதி கருத்துக்கள் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். 2010, 15 காலகட்டத்திற்கு பிறகு இவர் நடித்த படங்கள் வெளி வந்தாலே ஹிட் தான் வசூல் சாதனை படைக்கும் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார் விஜய்.

   

சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தாலும் மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று விரும்பி அரசியலில் இறங்க போவதாக அறிவித்து தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அதன் பணிகளை கவனித்து வருகிறார் விஜய். இந்நிலையில் சமீபத்தில் விஜயையும் த்ரிஷாவையும் வைத்து பல சர்ச்சைகள் வெளியானது. பாடகி சுசித்ரா கூட விஜயும் திரிஷாவும் சீக்கிரட் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள் த்ரிஷாவுக்கு எம்ஜிஆர் ஜெயலலிதா எப்படி இருந்தார்களோ அதே போல் விஜயுடன் இருக்க வேண்டும் என்று ஆசை என்று ஏகப்பட்ட சர்ச்சையான விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

 

தற்போது நடிகை ஷர்மிளா சுசித்ரா இந்த மாதிரி விஜயை பேசியதற்கு பல சரமாரி கேள்விகளை கேட்டிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் விஜய்யும் திரிஷாவும் பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். இப்போது கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு விஜய் செல்கிறார் என்றால் தெரிந்தவர்கள் இருந்தால் எப்போதும் நாமளும் கூடவே சேர்ந்து பயணித்தால் நன்றாக இருக்குமே அப்படின்னு பிரண்ட்லியா கூட திரிஷா சென்று இருக்கலாம். அதை எப்படி தவறாக கூற முடியும். முதலில் விஜய்க்கும் சுசித்ராவுக்கு என்னதான் சம்பந்தம். சம்பந்தமே இல்லாத ஒருவரை பற்றி வீணாக பழி போடுவது எந்த வகையில் நியாயம் என்று சரமாரியாக கேள்விகளை கேட்டிருக்கிறார் நடிகை ஷர்மிளா.