மகிழ்திருமேனி தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர்கள் செல்வராகவன் கௌதம் மேனன் ஆகியோருடன் உதவி இயக்குனராக பணி புரிந்தார் மகிழ்த்திருமேனி.

கௌதம் மேனன் இயக்கிய “காக்க காக்க”, “பச்சைக்கிளி முத்துச்சரம்”, “வேட்டையாடு விளையாடு” ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் மகிழ்திருமேனி. 2019 இல் “முன்தினம் பார்த்தேனே” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் மகிழ்திருமேனி. அதைத்தொடர்ந்து “தடையறத் தாக்க”, “மீகாமன்” 2021 ஆம் ஆண்டு “கழகத் தலைவன்” ஆகிய திரைப்படங்களை இயக்கினார்.
உதயநிதி ஸ்டாலினை வைத்து மகிழ்திருமேனி இயக்கிய கழக தலைவன் திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதைத்தொடர்ந்து தற்போது அஜித்தை வைத்து விடாமுயற்சி என்ற திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார் மகிழ்திருமேனி. இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருந்து தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. விரைவில் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட மகிழ்த்திருமேனி விஜய் அவர்களை பற்றி பேசி இருக்கிறார். அவர் கூறியது, நான் விஜய் சாரிடம் ஏற்கனவே பல கதைகள் கூறினேன். அவர் எனக்கு கன்பியூசாக இருக்கு நீங்களே ஒரு கதையை செலக்ட் செய்து வாருங்கள் என்று கூறினார். நான் செலக்ட் செய்து போய் கூறினேன். விஜய் சாரும் ஓகே என்று சொன்னார். ஆனால் அதற்குள் உதயநிதி அவர்கள் டோக்கன் அட்வான்ஸ் எனக்கு தந்துவிட்டார்.

கழகத் தலைவன் படம் பண்ணலாம் என்று கூறினார். நான் அவரிடம் டைம் கேட்டேன் உதயநிதி சார் ஒத்துக் கொள்ளவில்லை. உடனே நான் விஜய் சாரிடம் விவரத்தை கூறினேன். அவரும் சரி நீங்கள் உதயநிதியை வைத்து படம் பண்ணிவிட்டு வாருங்கள் என்று கூறினார். அப்படித்தான் கழகத் தலைவன் படத்தை இயக்கினேன். ஆனால் விஜய் சாருக்காக என்னிடம் பல கதைகள் உள்ளது ஆனால் அதைப் பற்றி இனி என்ன செய்யலாம் என்று விஜய் சார் தான் கூற வேண்டும் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் மகிழ்திருமேனி.
