மீண்டும் உடைந்த அணை…. நேபாளத்தில் அலைக்கழியும் 1500 உயிர்கள்…. திபெத் எல்லை பகுதியில் வீசிய அடுத்த பேரதிர்ச்சி… சற்றுமுன் அவசர எச்சரிக்கை….!

Spread the love

நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு கடுமையான பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. மலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக உருவாகியிருந்த தற்காலிக நீர்த்தடுப்புகள் உடைந்ததால், சீறிப்பாய்ந்த வெள்ளநீர் ராசுவா மாவட்டத்தின் பாட்டேகோஷி மற்றும் திரிசூலி ஆறுகளில் கலந்து பெரும் அழிவை ஏற்படுத்தியது. இந்த இயற்கை சீற்றத்தில் 469 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,500க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. பாறைகள், சேறு மற்றும் இடிபாடுகள் கலந்த வெள்ளநீர் அடித்து வந்ததில் கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் வீதிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில், திபெத் பகுதியில் மீண்டும் ஒரு நீர்த்தடுப்பு உடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளதால், ஆற்றின் கீழ்நிலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு நேபாள அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினரும் எச்சரிக்கப்பட்டுப் பாதுகாப்பான மண்டலங்களுக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள். எல்லைப் பகுதியில் உள்ள பாட்டேகோஷி ஆற்றின் தற்போதைய நிலவரத்தைக் கண்காணிக்கவும் நிலையை ஆய்வு செய்யவும் நேபாள அரசு சிறப்பு ஆய்வுக் குழு ஒன்றை அனுப்பியுள்ளது.

முன்னதாக, திபெத் பகுதியில் நிலச்சரிவு காரணமாக உருவான புதிய இயற்கை ஏரியில் சுமார் 20 லட்சம் கனமீட்டர் நீர் தேங்கியிருப்பதாகவும், அது மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் சீனா எச்சரித்திருந்தது. இந்த தடுப்பு சுவர்கள் உடைந்தால் நேபாளப் பகுதியில் மீண்டும் ஒரு பேரழிவு வெள்ளம் ஏற்படும் என அஞ்சப்பட்ட சூழலில், தற்போதைய அணை உடைப்பு செய்தி கூடுதல் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சேறு மற்றும் குப்பைகள் பல அடி உயரத்திற்கு மூடியுள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைவதிலும் மீட்பு அதிகாரிகளுக்கு கடும் சவால்கள் நிலவுகின்றன.

இத்தகைய இக்கட்டான சூழலிலும் நேபாள ராணுவமும் மீட்புக் குழுவினரும் மீட்புப் பணிகளைத் தீவிரமாகத் தொடர்ந்து வருகின்றனர். இதுவரை சுமார் 3,253 பேர் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும், அங்குள்ள நீர்மின் திட்ட சுரங்கப் பாதைகளின் நுழைவுவாயில்கள் சேற்றால் அடைபட்டுள்ளதால், உள்ளே சிக்கியிருப்பவர்களைக் கண்டறியும் பணிகள் தாமதமாகி வருகின்றன. மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற அச்சுறுத்தலால் இந்த நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேலும் சிக்கலடைந்துள்ளன.

Nanthini

Recent Posts

“பெண் ஊழியரை மாடியிலிருந்து தள்ளிவிட்டு…” ஷோரூம் வாசலில் வைத்தே மது குடித்துவிட்டு உள்ளே புகுந்த கும்பல்… பயங்கர தாக்குதல்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…

10 மணத்தியாலங்கள் ago

20 வருட திருமண வாழ்க்கை….! 9 துண்டுகளாக வெட்டப்பட்டு கார் பேக்கில் வீசப்பட்ட இந்தியர்…! மாயமான மனைவி, மகன்… விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…

11 மணத்தியாலங்கள் ago

“பேனா வாங்க சென்ற 11 வயது சிறுமி…” கை, கால்களை கட்டிப்போட்டு சீரழித்த 56 வயது முதியவர்… பெற்றோரிடம் கதறிய மகள்… இரவில் நடந்த பகீர் சம்பவம்…!!

டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…

11 மணத்தியாலங்கள் ago

“நாங்க போலீஸ்…” கோவிலுக்கு சென்ற  17 வயது சிறுமி… மிரட்டிய சீரழித்த கும்பல்…. பரபரப்பு சம்பவம்…!!

தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…

11 மணத்தியாலங்கள் ago

“எரிந்துகொண்டிருந்த பிணச் சிதையில் இறைச்சி சமையல்…” உறைந்து போன மகன்… சுடுகாட்டில் நடந்த நடுங்க வைக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…

11 மணத்தியாலங்கள் ago

“என் தங்கையைக் கொன்றவனை நான் கொன்றுவிட்டேன்…” 4 மாத கர்ப்பிணி கொலை… கணவரை பழி வாங்கிய அண்ணன்…. பகீர் சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…

12 மணத்தியாலங்கள் ago