ரயில்வே துறையின் அலட்சியம்?… நொடியில் பறிபோகும் உயிர்… ஓடும் ரயிலில் பெண்கள் போராடும் காட்சி… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!

By Gayathri on ஆவணி 24, 2026

Spread the love

சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வைரலாகிய ஒரு வீடியோ, மும்பை புறநகர் ரயில் ஒன்றில் பெண்கள் மிகவும் ஆபத்தான முறையில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதைக் காட்டி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கல்யாண் பகுதியிலிருந்து புறப்பட வேண்டிய பெண்களுக்கான சிறப்பு ரயில் சுமார் 40 நிமிடங்கள் தாமதமாக வந்ததே இந்த அதீத கூட்ட நெரிசலுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலுக்குள் நுழைய இடமில்லாததால், பெண்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஓடும் ரயிலின் வாசலில் தொங்கியபடி பயணித்த இந்தச் சம்பவம், மும்பைவாசிகளின் அன்றாடப் பயண நெருக்கடிகளை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது.

இந்த நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோவைக் கண்ட இணையவாசிகள் பலரும், “ரயிலைத் தவறவிட்டால் அடுத்த ரயிலைப் பிடித்துவிடலாம், ஆனால் உயிர் போனால் திரும்பக் கிடைக்காது என்று குறிப்பிட்டுத் தங்களது கவலைகளைத் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகமும் இதற்குப் பதிலளித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்தச் சம்பவம் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலால் ஏற்படும் இதுபோன்ற ஆபத்துகளைத் தவிர்க்க, ரயில் சேவைகளைச் சரியான நேரத்தில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுப்பெற்றுள்ளது.