மேடையில் தொழிலாளர் செய்த செயலால், மாறிப்போன நயன்தாராவின் முகம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..

By Mahalakshmi on தை 11, 2024

Spread the love

சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற Femi 9 Success Meet   நிகழ்ச்சியில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா,  இயக்குனர் விக்னேஷ் சிவன், பேச்சாளர் கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழிச்சியின் போது  தொழிலாளர் ஒருவர் செய்த காரியம் அனைவரையும் ஒரு நிமிடம் நெகிழச் செய்தது.

   

திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக  கொடிகட்டி பறக்கும் நயன்தாரா Femi Product  சக்ஸஸ் மீட் லாஞ்சில் தலைமை விருந்தினராக  கலந்து கொண்டார். இந்த Femi 9 ப்ராடக்ட் நன்மைகள் பற்றி நயன்தாரா பல வீடியோவில் பதிவிட்டுள்ளார்; இந்த  ப்ராடக்ட் பயன்படுத்தும் பெண்களுக்கு சௌகரியமான சூழ்நிலையை  கொடுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

   

 

இந்த சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  தொழிலார்களுக்கு தன் கையால் விருது வழங்கினார். அப்போது தொழிலாளர் ஒருவர் விருது வழங்கும் போது நயன்தாராவிடம்  ஏதோ பதட்டமாக பேசினார். இதை பார்த்ததும் அனைவரும் ஒரு நிமிடம் ஷாக் ஆகிடாங்க. இந்நிலையில் அந்த தொழிலாளரிடம் மைக் கொடுத்ததும், அதில் அவர் தன் கணவருடன் இணைந்து இந்த விருதை வாங்குகிறேன் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும்,  தன் கணவன்  12 வருடமாக என் கனவிற்கு உறுதுணையாக இருக்கிறார் அவருடன் இணைந்து இந்த விருதை வாங்குவது பெருமையாக இருக்கிறது  என்று கூறியிருந்தார். இந்த நிகழிச்சியில் அந்த தொழிலாளர் செய்த காரியம் நயன்தாரா உட்பட அனைவரையும் மனநெகிழ செய்தது. உடனே நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து அந்த தம்பதிக்கு மனதார விருதை வழங்கினார்.