ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோவை செருப்பால் நையப் புடைத்த நடிகை சோனியா அகர்வால்.. லீக் ஆன உண்மை..

By admin on தை 11, 2024

Spread the love

காதலால் மனம் உருக வைத்த 7G ரெயின்போ காலனி படத்தை பார்க்காத 90’s, 2K கிட்ஸ்கள் யாரும் இருக்க முடியாது. செல்வராகவன், நா.முத்துக்குமார், யுவன்சங்கர்ராஜா கூட்டணி இணைந்து நடத்திய காதல் மேஜிக்கில் இதுவும் ஒன்று. காதல் கொண்டேன் படத்திற்குப் பிறகு 7G ரெயின்போ காலனி படத்தின் மூலம் இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநராக அவதாரம் எடுத்தார் செல்வராகவன். கடந்த 2004-ல் வெளியான இத்திரைப்படத்தில் ரவிகிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர். சிறந்த காதல் கதைக் கரு, யதார்த்தமான காட்சி அமைப்புகள் என அனைத்திலும் இப்படம் ஸ்கோர் செய்தது.

#image_title

நா.முத்துக்குமாரின் ஒவ்வொரு பாடல் வரிகளும் படத்திற்கு தாங்கிப் பிடிக்கும் தூண்களாக அமைந்தது. கிட்டத்தட்ட 175 நாட்கள் திரையரங்குகளில் ஓடி சாதனையை நிகழ்த்தியது 7G ரெயின்போ காலனி. இப்படத்தின் ஒரு காட்சியில் நடந்த உண்மையைத் தான் ஹீரோ ரவிகிருஷ்ணா பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதன்படி 7G ரெயின்போ காலனி படத்தில் சோனியா அகர்வால் பேருந்தில் கல்லூரிக்குச் செல்லும் போது அவருடன் பேசுவதற்காக மெல்ல நகர்ந்து அவர் அருகே ரவிகிருஷ்ணா சென்று நிற்பார்.

   
   

திடீரென பஸ் பிரேக் பிடிக்க சோனியா அகர்வாலின் மேல் அவர் கை வைப்பார். அதற்கு சோனியா அகர்வால் உடனே கோபத்துடன் செருப்பை எடுத்து அடிக்கும் காட்சி இடம் பெற்றிருக்கும்.

 

‘பாபநாசம்’ படத்தில் வந்த கமலின் இளைய மகளா இது…? கவர்ச்சியில் முன்னணி நடிகைகளை மிஞ்சிய புகைப்படங்கள்..

படப்பிடிப்பில் இக்காட்சி நன்றாக வர வேண்டும் என்பதற்காகவே நிஜமாகவே ஹீரோயின் ஹீரோவை செருப்பால் அடிக்கச் சொன்னாராம் இயக்குநர் செல்வராகவன்.

இதனால் நிஜமாகவே ரவி கிருஷ்ணா செருப்பால் அடி வாங்கினாராம். அண்மையில் 7G Reunion பேட்டி ஒன்றில் இதைத் தெரிவித்த அவர், அக்காட்சி சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக இயக்குநர் சோனியாவை நிஜமாகவே அடிக்கச் சொல்ல என்னை அவர் அடித்தார். இதேபோல் தெலுங்கு பதிப்பிற்கும் அடித்தார். ஆகவே இரு முறை அடி வாங்கியுள்ளேன். நல்ல வேளையாக ஒரே டேக்கில் முடிந்து விட்டது. இல்லையெனில் பல முறை அடிவாங்கியிருப்பேன். மேலும் அக்காட்சிக்கு புதிய செருப்புதான் பயன்படுத்தப்பட்டது எனவும் அப்பேட்டியில் ரவிகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.