தொடர்ச்சியாக தோல்வி படங்கள் கொடுத்தும் பல கோடி சம்பளம் கொடுத்து நயன்தாராவை புக் செய்வது ஏன்.?

By Ranjith Kumar

Published on:

2003 ஆம் ஆண்டு மலையாள படமான “மனசினகாரே” என்ற படம் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானார் “நயன்தார” . அதன் பின்னதாக 2005 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த “ஐயா “படம் மூலம் தமிழ் திரையுலகில் முதன்முதலாக அறிமுகமானார். அதற்கு அடுத்ததாக சந்திரமுகி, சிவகாசி, கஜினி, பில்லா போன்ற படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார். இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பழமொழிகளில் நடித்திருக்கிறார்.

இந்தியாவில் உள்ள மாபெரும் முன்னாடி நடிகர்களுடன் நடித்த தற்போது வரை தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார். கிட்டத்தட்ட 20 வருட காலமாக சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படமான அறம், நெற்றிக்கண், கோலமாவு கோகிலா போன்ற பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முன்னணி படங்களில் நடித்து தனக்கென்று பல ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார். ஆனால் சில காலமாக இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் தோல்வியை தழுவி வருகிறது.

   

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த “நானும் ரவுடிதான்” படத்தில் நடித்து, இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களுடன் நண்பர்களாக பழகி சிறிது காலம் கழித்து காதலாக மாறி தற்போது கல்யாணம் செய்து கொண்டுள்ளார். இவர் கல்யாணத்துக்கு பிறகு சினிமாவில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல், இல்லற வாழ்க்கையிலே முழு நேரமாக செயல்பட்டு வருகிறார். அதனால் என்னவோ தெரியவில்லை, இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் சரியாக போகவில்லை, கிட்டத்தட்ட கடைசி நடித்த பத்து படங்கள் தோல்வியே தான் தழுவியது. ஆனாலும் இவரின் மார்க்கெட் ஒரு காலத்தில் பெரிதாக இருந்ததால், ப்ரொடியூசரும் இயக்குனரும் வந்து குவிந்து கொண்டிருக்கிறார்கள்.

முந்தைய படம் கதை சரியில்லாமல் போயிருக்கலாம், அல்லது திரைக்கதை சரியில்லாமல் போயிருக்கலாம் என்று நினைத்து, நம் இயக்கும் படம் நன்றாக தான் இருக்கும் என்று இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இன்று வரை நயன்தாராவின் கால்ஷீட்டுக்காக காத்துக் கொண்டு தான் உள்ளார்கள். இவர் எவ்வளவு தோல்வி படம் கொடுத்தாலும் இவரின் ஒவ்வொரு படத்திற்கும் தல 7 கோடி ரூபாய் அளவில் சம்பளம் குறையாமல் கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்குக் காரணம் இவரின் மிகச்சிறந்த நடிப்பே ஆகும். அதனால்தான் இவரின் படத்தேதிக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

author avatar
Ranjith Kumar