நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் மற்றும் காதல் உருவானது குறித்தான ஆவண படத்தை நெட்பிலிக்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. இந்த ஆவணப்படம் சில தனிப்பட்ட காரணங்களால் தள்ளிப் போனது. அதாவது நானும் ரவுடிதான் திரைப்படத்தின் இயக்குனராக விக்னேஷ் சிவன் இருந்த நிலையில் நயன்தாரா படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்திற்கு பிறகு தான் இருவருக்கும் காதல் மலர்ந்து பிறகு திருமணம் செய்து கொண்டனர். அதிலிருந்து சில காட்சிகளை இந்த ஆவணப்படத்தில் வைக்க திட்டமிட்டிருந்த நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தனக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விவகாரம் கடந்த இரண்டு வருடங்களாக நீடித்தது.
இப்படியான நிலையில் நயன்தாரா பகிரங்கமாக தனுஷை நேரடியாக தாக்கி மூன்று பக்க லெட்டர் ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தார். அதில் தனுசுக்கு நேரடியாக பல கேள்விகளை நயன்தாரா எழுப்பி இருந்த நிலையில் இதனை தொடர்ந்து நயன்தாராவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றன. குறிப்பாக தனுசுடன் பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்த நடிகைகள் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இப்படியான நிலையில் பாடகி சுசித்ரா தனுஷ் மற்றும் நயன்தாரா விவகாரம் குறித்து பேசி உள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், நயன்தாரா அறிக்கை வெளியிட்டு பல மணி நேரம் கழித்து தான் நான் அதை பார்த்தேன். அப்போ எனக்கு நிறைய பேர் மெசேஜ் பண்ணி இருந்தாங்க. மேம் அன்னிக்கு நீங்க சொன்னதை நாங்க நம்பல, இன்னைக்கு நயன்தாரா மேம் இது மாதிரி அறிக்கை வெளியிட்டதும் நீங்க சொன்னது உண்மைன்னு எங்களுக்கு தெரியுது அப்படின்னு சொன்னாங்க. நடிகைகள் பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்து இருக்காங்க. ஆதரவு தெரிவிச்சா மட்டும் போதாது நடிகை அனுபாமா பரமேஸ்வரன், நஸ்ரியா மற்றும் பார்வதி ஆகியோர் வெளிப்படையாக சில வரிகள் tweet போடலாம்.
நயன்தாரா இந்த அளவுக்கு வெளிப்படையா தனுஷ குறிப்பிட்டு பேசியதற்கு அப்புறம் அவங்க கிட்ட இருந்து கொஞ்சம் தைரியத்தை நீங்களும் கடன் வாங்கிகிட்டு வெளிப்படையா உங்களுக்கு நடந்ததை வெளியில சொல்லுங்க. இதைவிட தனுஷ் கிட்ட நிறைய கொடுமைகளை அனுபவிச்ச நடிகைகள் பல பேரு இருக்காங்க. அவங்க எல்லாம் தங்களுக்கு நடந்ததை பத்தி வெளியில சொன்னாதான் உண்மை வெளியில வரும். என்ன மாதிரி நயன்தாரா மாதிரி நீங்களும் வெளிப்படையா பேசணும் என்று சுசித்ரா நயன்தாரா மற்றும் தனுஷ் விவகாரம் குறித்து பேசி உள்ளார்.
அமெரிக்காவில் உயர்கல்வி முடித்து பணியாற்றி வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் முகம்மத் ஜாபர் உசேன், மசாசூசெட்ஸ் மாகாணத்திலுள்ள…
சோனிபட் பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போன ஆறு வயது சிறுமி, அருகே உள்ள நீர் தொட்டியில் சடலமாக…
டி நகர் வாணி மகால் மேம்பாலம் அருகே ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி ஊழியரான கார்த்திகேயன் என்பவரிடமிருந்து ரூ 11 லட்சம்…
ஹைதராபாத்தின் அத்தாப்பூர் பகுதியில் உள்ள சிந்தல்மெட் டி-மார்ட் கூட்ரோடு அருகே, இளைஞர்கள் சிலர் காரில் ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபட்டு…
இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…
காதலித்த இளைஞனைத் திருமணம் செய்ய குடும்பத்தினர் மறுத்ததால், ஒரு இளம் பெண் அவனுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையறிந்த அப்பெண்ணின்…