Categories: சினிமா

3 நொடி விளம்பரத்துல நீங்க சும்மா நடிப்பீங்களா…? விக்னேஷ் சிவனால் மனஉளைச்சலுக்கு ஆளானேன்… பிரபல இயக்குனர் அதிரடி…

Spread the love

நயன்தாரா தனுஷ் இடையேயான காப்பிரைட் விவகாரம் பூதாகரமாகி கொண்டே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். நேற்று நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியின் திருமண டாகுமெண்டரியில் நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்கு தனுஷ் 10 கோடி கேட்கிறார் என்று அறிக்கை வெளியிட்ட பொழுது அனைவரும் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

ஆனால் போகப் போக தனுஷ் மீது எந்த தவறும் இல்லை என்பது போல ஒவ்வொருவரும் வெளியே வந்து நயன்தாராவுக்கு எதிராக பேச ஆரம்பித்தார்கள். அதில் முதலாவதாக வெளியே வந்து குரல் கொடுத்தது இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் எஸ் எஸ் குமரன். இவர் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். இதே பெரிய சர்ச்சையை கிளப்பி இருந்தது.

அந்த அறிக்கையில் நீங்கள் இப்போது தனுஷிடம் நியாயம் கேட்கிறீர்களே நயன்தாரா கடந்த வருடம் உங்கள் கணவர் விக்னேஷ் சிவன் என்னுடைய படத்தின் டைட்டிலை திருடினாரே அதுக்கு நீங்க எங்க பதில் சொல்ல போறீங்க என்று கேட்டிருந்தார். விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படம் எல் ஐ சி .இது முதலில் எல்ஐசி என்று இருந்தது பிரச்சனைக்கு பிறகு எல்கே என்று மாற்றப்பட்டது. இந்த பெயரை குறிப்பிட்டு தான் எஸ் எஸ் குமரன் அதாவது ஒரு வருடத்திற்கு முன்பாகவே ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

தற்போது நேற்று இந்த அறிக்கை வெளியான பிறகு அவர் அளித்த பேட்டியில் எல் ஐ சி என்ற ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என்று அந்த பெயரை நான் தயாரிப்பாளர் கமிட்டியில் நான் ஏற்கனவே 2016 இல் பதிவு செய்து விட்டேன். அப்போது விக்னேஷ் சிவன் இந்த பெயரை வேண்டும் என்று நினைக்கும் போது முதலில் அவரது மேனேஜரை வைத்து என்னிடம் பேசுகிறார் டைட்டில் கொடுக்க முடியுமா என்று கேட்கிறார் நான் முடியாது என்று சொல்லிவிட்டேன்.

இதற்கு அடுத்த கட்டமாக மறுநாளே விக்னேஷ் சிவன் என்னை தொடர்பு கொண்டு என்னுடைய டைட்டில் உங்களிடம் எப்படி வந்தது என்று பிளேட்டை மாற்றி பேசி விட்டார். அதற்கு பிறகு ஏகப்பட்ட பிரச்சனை இந்த டைட்டிலால் நடந்தது. வழக்குகள் வக்கீல் என நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். தனுஷ் மாதிரி பெரிய இடம் என்பதால் அவர்கள் இரண்டு வருடம் காத்திருந்து இருந்திருக்கிறார்கள். தனுஷிடம் நியாயம் இருப்பதினால் தானே இரண்டு வருடம் காத்திருந்தார்கள். என்னைப் போல பிரபலம் இல்லாத ஒரு மனிதனை எதுவும் செய்ய முடியாது என்று நினைப்பில் என்னுடைய டைட்டிலை திருடி விட்டார்கள் ஒரு மூன்று நொடி விளம்பர படத்தில் நடிப்பதற்கு நீங்கள் காசு வாங்காமல் செய்வீர்களா அதே போல் தான் எல்லோரும் என்று அதிரடியாக பேட்டி அளித்திருக்கிறார் இயக்குனர் எஸ் எஸ் குமரன்.

admin

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

6 மணத்தியாலங்கள் ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

6 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

6 மணத்தியாலங்கள் ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

6 மணத்தியாலங்கள் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

6 மணத்தியாலங்கள் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

7 மணத்தியாலங்கள் ago