முடி உதிர்கிறதா? பொடுகு பிரச்னையா? நீளமான கூந்தல் வளர்ச்சி இல்லையா? – இதற்கெல்லாம் இந்த இயற்கை எண்ணெய் ஒன்று போதுமே…

By Elango on மார்கழி 13, 2025

Spread the love

ஆண்கள் பெண்கள் இருபாலருக்குமே முடி பராமரிப்பு என்பது மிக அவசியமானதாக இருக்கிறது. ஆனால் முடி உதிர்தல் பிரச்சனை பலருக்கும் இருக்கிறது. ஒருவருக்கு முடி உதிர ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம். பொடுகு தலையில் சேரும் அழுக்கு மன அழுத்தம் ஹார்மோன் பிரச்னைகளாலும் முடி உதிர வாய்ப்புள்ளது. இப்பிரச்னைகளுக்கு தீர்வாக இயற்கை எண்ணையை பயன்படுத்தலாம்.

இயற்கை எண்ணெய் – தேவையான பொருட்கள்
3 – 4 நெல்லிக்காய்கள், வெங்காயம் 2, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம், 2 தேக்கரண்டி ஆளி விதைகள், 10 முதல் 15 வேப்ப இலைகள், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, ஒரு தேக்கரண்டி வெந்தயம், 5 முதல் 6 செம்பருத்தி பூக்கள், 7 – 8 செம்பருத்தி இலைகள், ஸ்பைக் நார்ட் தாவரம், தேவைப்பட்டால் ரோஸ்மேரி, 300 கிராம் தேங்காய் எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஊற்றி வைக்க ஒரு பாட்டில் ஆகியவை வேண்டும்.

   

முதலில் வேப்பிலை மற்றும் கருவேப்பிலையை கழுவி ஒரு துணியில் போட்டு உலர வைக்க வேண்டும். பின்னர் அவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கி அதில் கருஞ்சீரகம் ஆளி விதைகள் மற்றும் வெந்தயத்தை போட்டு அரைக்கவும். நெல்லிக்காயை கழுவி வெங்காயத்தை தோலுரித்து அதனுடன் சேர்த்து அரைக்கவும். பின்பு இரண்டையும் கலக்கவும். ஒரு ஜாடி அல்லது கண்ணாடி பாட்டிலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் கருஞ்சீரகம் மற்றும் நெல்லிக்காய் வெங்காயம் உள்ளிட்டவற்றின் பொடியை சேர்க்கவும். அந்த பாட்டிலை மூடி குறைந்தது 10 நாட்களுக்கு சூரிய ஒளியில் தினமும் வைக்கவும். நீங்கள் விரும்பினால் 10 நாட்களுக்குப் பிறகு எண்ணெயை வடிகட்டி சேமித்து வைக்கலாம். இது உங்கள் கூந்தல் பராமரிப்புக்கும் முடி நன்றாக நீளமாக வளரவும் உதவுகிறது.