குண்டா இருக்கீங்களா…? இந்த 4 பழங்களை மட்டும் சாப்பிடுங்க…. ஈஸியா வெயிட் லாஸ் பண்ணலாம்….!!

By Devi Ramu on மார்கழி 13, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை காரணமாக எடை அதிகரிப்பது ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. குறிப்பாகக் குளிர்காலத்தில் பசி அதிகமாக இருப்பதாலும், உடல் உழைப்புக் குறைவதாலும் எடை மேலும் வேகமாக அதிகரிக்கும். எனவே, இந்த நாட்களில் உணவில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும். உடல் எடையைக் குறைக்க உதவும் முக்கியமான நான்கு குளிர்காலப் பழங்களைப் பற்றி இங்கு காணலாம்.

கொய்யாப்பழம்: இதில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து இருப்பதால், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். இது இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி விரைவான எடை இழப்புக்கு உதவும்.

   

பப்பாளி: கலோரிகள் குறைவாகவும், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாகவும் உள்ளது. இதை தினமும் காலை உணவில் சேர்ப்பது செரிமானத்தை மேம்படுத்தி, கொழுப்பைக் குறைக்க உதவும்.

   

ஆரஞ்சு: வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்த ஆரஞ்சு, அதிக உணவுப் பசியைக் கட்டுப்படுத்த உதவும். இதில் உள்ள வைட்டமின் சி வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, கொழுப்பை எரிக்கவும் நன்மை பயக்கும்.

 

ஆப்பிள்கள்: ஆப்பிளில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து உங்களை நீண்ட நேரம் பசியில்லாமல் வைத்திருக்க உதவுகிறது. தினமும் சிறிது கருப்பு மிளகுத் தூள் தூவி ஆப்பிள் துண்டுகளைச் சாப்பிடுவது எடை இழப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும்.