பொதுவாகவே ஆண்களுக்கும், பெண்களுக்கும் தங்களுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசைதான் அதிகமாக இருக்கும். தற்போது பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்தபடி வேலை செய்வது, துரித உணவுகளின் பயன்பாடு அதிகரிப்பு, போதிய உடற்பயிற்சியின்மை ஆகிய காரணத்தால் இளம் வயதிலேயே தொப்பை, உடல் பருமன் அதிகரிக்க ஆரம்பித்து வருகிறது. அதனால் தொப்பையை குறைப்பதற்கு உடற்பயிற்சி செய்யவும் நேரம் இல்லாமல் சந்தையில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் முயற்சித்து நேரத்தையும், பணத்தையும் இழந்து வருகிறோம். இதனால் ஆரோக்கிய பிரச்சனைகளும் ஏற்படுகிறது.
ஆனால் அதிக செலவு இன்றி விரைவில் தொங்கும் தொப்பையை இருந்த இடம் தெரியாமல் ஆக்குவதற்கு ஹெர்பல் டீக்கள் எவ்வாறு சிறப்பாக பங்காற்றுகிறது? என்று குறித்து பார்க்கலாம். ஹெர்பல் டீக்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கொழுப்பை வேகமாக கரைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இது அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டது. காபி, டீயை விட அளவு காபின் கொண்ட கிரீன் டீயில் உள்ள சில வகை ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு கப் சூடான நீரில் கிரீன் டீ இலைகளை ஊறவைத்து தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதால் உடலில் இருந்து நச்சுக்கள் வெளியேறுவதோடு தொப்பை பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.
புதினா மூலிகை தேநீர் புத்துணர்ச்சியூட்டும். இந்த தேனீர் இரவு நேரங்களில் தூக்க பிரச்சனைகள் மற்றும் பதட்டம், படபடப்பு போன்ற பிரச்சனைகளுக்கு இது சிறந்த தீர்வு. செரிமானத்தை மேம்படுத்தி வயிறு உப்புசத்தை குறைக்கும். மெட்டபாலிசத்தை அதிகரித்து வயிற்று கொழுப்பை கரைப்பதில் முக்கிய பங்கு ஆற்றுகிறது. சீமை சாமந்திப் பூக்களை கொண்டு டீ செய்து குடிக்கலாம். வயிறு சார்ந்த பிரச்சனைகள் இருந்து விடுப்பா இது துணை புரியும் . ஒரு கப் வெந்நீரில் சீமை சாந்தி பூக்களை ஐந்து நிமிடம் ஊற வைத்து தூங்குவதற்கு 30- 40 நிமிடங்களுக்கு முன் குடிப்பது உடல் எடையை பராமரிப்பதில் நல்ல பலன் கொடுக்கிறது.
