இண்டிகோ விமானம் ஆனது சூரத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜெய்ப்பூருக்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தது. விமானத்தில் பயணிகள் அனைவரும் வந்து அமர்ந்திருக்க விமானத்தின் லக்கேஜ் கதவு திறந்திருந்தபோது அதன் ஒரு பகுதியில் தேனீக்கள் சூழ்ந்து கொண்டது. இதனால் செய்வதறியாது விமான ஊழியர்கள் தவித்துள்ளார்கள். இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
#Watch | Surat-Jaipur Flight Delayed By 1 Hour. Reason: Swarm Of Bees On Cargo Doorhttps://t.co/8wCpFV0mjg pic.twitter.com/KlUhIAIr11
— NDTV (@ndtv) July 8, 2025
அதன் பிறகு தேனீக்களை விரட்ட முதலில் புகை பயன்படுத்தப்பட்டது. ஆனால் அது வேலை செய்யவில்லை என்பதால் கடைசியாக தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு அதன் பிறகு தேனீக்கள் அப்புறப்படுத்தப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு விமானம் தாமதமாக ஜெய்ப்பூருக்கு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் விமான நிலையப் பகுதிகளில் சில மணி நேரம் பரபரப்பு சூழ்ந்து காணப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
