மாதந்தோறும் ₹1,000 உதவித்தொகை… நாளை முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு…!!

By Soundarya on மார்கழி 14, 2025

Spread the love

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையின்படி, தேசிய வருவாய்வழி மற்றும் தகுதித் தேர்வு (National Means-cum-Merit Scholarship Scheme – NMMS) திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற, 8-ம் வகுப்பு படிக்கும் விருப்பமுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஜனவரி 10-ம் தேதி தேர்வு நடைபெறுகிறது.  இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை (நான்கு ஆண்டுகளுக்கு) மாதந்தோறும் ₹1,000 வீதம் மொத்தம் ₹48,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.  இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஒரு மாணவருக்கு ₹50 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் அனைவரும் தங்கள் பள்ளி ஆசிரியர்களை அணுகி, நாளை முதல் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.