BREAKING: “அநியாயம் நடக்குது தளபதியே”… விஜய் அலுவலகத்தில் பரபரப்பு… வெடித்தது போராட்டம்…!

By Nanthini on மார்கழி 14, 2025

Spread the love

திருவள்ளூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்சி மோதலுக்கு தீர்வு காண வலியுறுத்தி அக்கட்சியின் பனையூர் தலைமை அலுவலகம் முன்பாக 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பனையூர் தமிழக வெற்றிக்கழகம் தலைமை அலுவலகம் உள்ளேயே சென்று தமிழக வெற்றிக்கழகம் கட்சியினரே போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கட்சியில் பதவி தருவதாக பலரிடம் பணம் வாங்கிக் கொண்டு திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இதனிடையே ஆதவ் அர்ஜுனாவின் போட்டோவை பேனரில் பயன்படுத்தியதற்காக வட்டச் செயலாளரை கட்சியிலிருந்து நீக்கி மாவட்ட செயலாளரை மாற்ற வேண்டும் எனவும் முழக்கம் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.