மாகாபா ஆனந்த் விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக வலம் வருகிறார். பிரியங்கா உடன் இணைந்து சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியாய் மாகாபா தொகுத்து வழங்கினார். அதில் பிரியங்காவுடன் சேர்ந்து மாகாபா பேசும் டயலாக் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
முதன் முதலில் அது இது எது என்ற நிகழ்ச்சியின் மூலம் மாகாபா ஆனந்த் விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்தார். சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் நடித்து வருகிறார். வானவராயன் வல்லவராயன் என்ற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். கடைசியாக சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரன் என்ற படத்தில் நடித்தார்.
இதே போல விஜய் டிவி நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு டிஜே பிளாக் பற்றி தெரியாமல் இருக்காது. எல்லா நிகழ்ச்சி நடுவர்கள், தொகுப்பாளர்களை கலாய்த்து டிஜே பிளாக் கவுண்டர் கொடுத்து கொண்டிருப்பார். மேலும் போட்டியாளர்களை கலாய்த்தும், பாராட்டியும் கரெக்டான டைமிங்கில் டிஜே பிளாக் கவுண்டர் கொடுத்து ரசிகர்களை ஈர்த்தார்.
இவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் நெப்போலியன் மகன் தனுஷ் மாகாபா மற்றும் டிஜே பிளாக் உடன் தான் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு நான் முதல் முறையாக இவர்களை சந்திக்கிறேன் என கூறியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.