விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு என்று நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் பாலா. அதனால் தான் இவரை கேபிஒய் பாலா என்று பலரும் கூறுகிறார்கள். இந்த ஷோவுக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தற்போது மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.
சின்னத்திரையில் ஜொலித்த இவருக்கு வெள்ளித்திரையிலும் கதவுகள் திறந்தன. சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். ஜுங்கா, தும்பா, சிக்சர், காக்டெயில், புலி குத்தி பாண்டி, லாபம், நாய் சேகர், நாய்சேகர் ரிட்டன்ஸ், கனம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களின் நடித்து வருகின்றார்.
சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் ஒரு காமெடி நடிகராக இருந்தாலும் பலருக்கு உதவிகளை செய்து வருகின்றார். அனாதை இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு உதவி செய்ய தொடங்கிய பாலா அதைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் மாஸ்டருடன் இணைந்து பல உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றார். தினம் தோறும் இவரது வீடியோ வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
மிக்சாம் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய தொடங்கிய கேபிஒய் பாலா தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்தார். பின்னர் முடியாத குழந்தைகளுக்கு பெற்றோர்களுக்கு என உதவி செய்யத் தொடங்கிய இவர் சமீபத்தில் கூட வாட்ச்மேன் ஒருவருக்கு சொந்தமாக வீடு ஒன்றை கட்டிக் கொடுத்திருந்தார். அதனை ராகவா லாரன்ஸ் மாஸ்டர் வந்து திறந்து வைத்திருந்தார்.
இப்படி ராகவா லாரன்ஸ் மாஸ்டருடன் இணைந்து மாற்றம் சேவையிலும் பல உதவிகளை செய்து வருகின்றார். இந்நிலையில் தற்போது அவரின் புதிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது ஒரு பெண்மணி 150 உடல் ஊனமுற்ற நாய்களை எடுத்து வளர்த்து வருகிறார்கள். அந்த நாய்களுக்கு போதிய உணவு வழங்குவதற்கு வருமானம் இல்லாத காரணத்தினால் கேபிஒய் பாலாவிடம் உதவி கேட்டு இருக்கிறார்கள்.
View this post on Instagram
உடனே அவரும் அரிசி, பிஸ்கட் உள்ளிட்ட பல பொருட்களை வாங்கிக் கொண்டு நேராக சென்று அந்த நாய்களுக்கு உணவிட்டு பின்னர் அந்தப் பெண்மணி இடம் பணத்தையும் கொடுத்து உங்களுக்கு தேவைப்படும் போது என்னிடம் கேளுங்கள் நான் நிச்சயம் உதவி செய்கிறேன் என்றும் கூறியிருந்தார். இந்த வீடியோ மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்த பெண்மணியும் கண்ணீர் மல்க பாலாவுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.