திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருந்தேனா..? கௌதம் அப்படித்தான் இருப்பார்.. நடிகை மஞ்சுமா உருக்கம்..!!

By Priya Ram on மே 29, 2024

Spread the love

பிரபல நடிகையான மஞ்சிமா மோகன் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். இதனையடுத்து சத்திரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், FIR உள்ளிட்ட படங்களில் மஞ்சுமா நடித்துள்ளார். தெலுங்கிலும் ஒரு சில படங்களில் மஞ்சுமா நடித்துள்ளார்.

Actor Gautham Karthik Actress Manjima Mohan Latest Photoshoot in Green  Dress | Manjima Mohan and Gautham Karthik: நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் நடிகை  மஞ்சிமா மோகனின் சமீபத்திய ...

   

கடந்த 2023-ஆம் ஆண்டு கடைசியாக மஞ்சுமா நடித்த Boo என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. அதன் பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. 2022 ஆம் ஆண்டு கெளதம் கார்த்திகை மஞ்சுமா காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் மஞ்சிமா நடித்த பேட்டியில் கூறியதாவது, திருமணத்திற்கு முன்பே நான் கர்ப்பமாக இருந்ததாகவும் எனது மாமனாருக்கு திருமணத்தில் விருப்பமில்லை எனவும் பொய்யான தகவல்கள் உலா வந்தது.

   

After 2 days of my love, Manjima Mohan accepted - Actor Gautham Karthik  interview | என் காதலை 2 நாள் கழித்தே, மஞ்சிமா மோகன் ஏற்றார் - நடிகர் கவுதம்  கார்த்திக் பேட்டி

 

அந்த வதந்திகள் எங்களது குடும்பத்தை மிகவும் காயப்படுத்தியது என்பதுதான் உண்மை. பெரும்பாலானோர் எங்கள் திருமணம் குறித்து மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் சிலர் ஏளனம் செய்தனர். திருமணத்திற்கு முன்பே நான் சில கருத்துக்களை எதிர் கொண்டேன். ஆனால் அது என்னை ஒருபோதும் பாதிக்கவில்லை.

Actor Gautham Karthik and actress Manjima will get married on 28th | வருகிற  28-ந் தேதி நடிகர் கவுதம் கார்த்திக்-நடிகை மஞ்சிமா திருமணம்

ஆனால் திருமணத்திற்கு பிறகு இது போன்ற சில கமெண்ட்களை படித்து கவலைப்பட்டு இருக்கிறேன். ஏன் கமெண்ட்களை படித்து வருத்தப்படுகிறாய் என கௌதம் கேட்பார். நான் அவருக்கு சரியான ஜோடி இல்லை என்ற விமர்சனங்களை பார்க்கும்போது மனசு வலிக்கும். அப்போது நான் தோல்வி அடைந்தவளாக உணர்வேன். ஆனால் கௌதம் எப்பொழுதும் எனக்கு உறுதுணையாக இருப்பார் என பேசியுள்ளார்.

வாழ்வின் மிகவும் மாயாஜாலமான தருணம்... கவுதம் - மஞ்சிமா திருமண போட்டோஸ் வைரல்