சிவாஜி இல்லாம தேவர் மகன் படத்தை நெனச்சு பாக்க முடியுமா?… ஆனா அப்படிதான் ப்ளான் பண்ணி இருந்தாங்களாம்… கமல் எடுத்த அதிரடி முடிவு!

By vinoth on மே 29, 2024

Spread the love

1992 ஆம் ஆண்டு கமல்ஹாசன் திரைக்கதை வசனத்தில் தேவர்மகன் திரைப்படம் வெளியானது. இந்த படமும் காட்பாதர் திரைப்படத்தை தழுவி உருவாக்கப்பட்டதுதான். மணிரத்னம் காட்பாதர் திரைப்படத்தை ஒரு கோணத்தில் தழுவி நாயகன் உருவாக்கி இருந்தார் என்றால், கமல்ஹாசன் அதை வேறொரு கோணத்தில் தழுவி உருவாக்கி இருந்தார்.

இந்த படத்தின் திரைக்கதையை கமல்ஹாசன் மூவி மேஜிக் எனும் திரைக்கதை சாப்ட்வேரில் எழுதினார். அப்போதுதான் அந்த தொழில்நுட்பம் அறிமுகமாகியிருந்தது. அதைப் பற்றி அறிந்த கமல், உடனடியாக அதைப் பயன்படுத்தினார். இதனால் 10 நாட்களுக்குள் அந்த திரைக்கதையை அவர் முடித்தார் என்று சொல்லப்படுகிறது.

   

இந்த படத்தில் கமல்ஹாசனோடு சிவாஜி கணேசன், ரேவதி, கௌதமி, வடிவேலு, ரேணுகா, நாசர், காக்கா சீனிவாசன் என பலர் நடிக்க மலையாள இயக்குனர் பரதன் இயக்கினார். இளையராஜா இசையில் பாடல்கள் எல்லாம் வைரல் ஹிட்டாகின. இந்த படம் 1992 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி சூப்பர் ஹிட் திரைப்படமாக ஓடியது.

   

இந்த படத்தின் வெற்றிக்கு முதல் பாதியில் பெரிய தேவராக சிவாஜியின் பாத்திரம் மிக முக்கியக் காரணியாக அமைந்தது. சிவாஜியின் கேரியரில் அவரின் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய படமாக தேவர் மகன் அமைந்தது. ஆனால் அந்த வேடத்தில் நடிக்க முதலில் சிவாஜியை படக்குழு தேர்வு செய்யவில்லையாம்.

 

விஜயகுமார் அல்லது எஸ் எஸ் ராஜேந்திரன் போன்ற நடிகர்கள்தான் அவர்களின் முதல் சாய்ஸாக இருந்ததாம். ஆனால் கமலுக்கு இந்த பாத்திரம் சிவாஜி சார் நடித்தால்தான் சிறப்பாக வரும் எனத் தோன்றவே நேராக சிவாஜியிடம் பேசியுள்ளார். கதை பிடித்திருந்த போதும் அப்போது அவரது உடல்நிலை சரியில்லாததால் தயங்கினாராம். ஆனால் சிவாஜியை சமாதானப்படுத்தி நடிக்க வைத்துள்ளார் கமல். மேலும் அப்போது தாடி வைத்திருந்த அவரை அதை எடுக்கவும் வைத்தும் மீசையோடு அந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார்.